தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ETV Bharat latest news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-11am
top-10-news-11am

By

Published : Aug 12, 2020, 11:15 AM IST

ஆபரண தங்கத்தின் விலை ரூ.1832 குறைந்தது

சென்னையில் இன்று (ஆக.12) ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்ததுள்ளது. அதன்படி சவரன் ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

ஜம்மு காஷ்மீரில் வழிபாட்டு தலங்கள் ஆக.16ஆம் தேதி முதல் திறப்பு!

ஜம்மு காஷ்மீரில் மத வழிபாட்டு தலங்கள் ஆக.16ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நடைமுறையில் அனைத்து பார்வையாளர்களும், ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர் ஊழல் வழக்கில் பணி இடமாற்றம் செய்யப்பட்டது தவறில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலரை பணி இடமாற்றம் செய்யும் அரசின் நடவடிக்கை தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தலைவர்களை விடுவிக்கக்கோரி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மனு

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 16 பேரை விடுவிக்கக்கோரி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

’எனது தேவைகள் அறிந்து சகோதரனாக நடத்தியவர் தயாரிப்பாளர் சுவாமிநாதன்’ - நடிகர் சிம்பு இரங்கல்

கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் ஜாம்பவான் வார்னே!

2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தனது 600ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

கரோனா தடுப்பூசி கொள்முதலை நிர்வகிக்க நிபுணர் குழு அமைப்பு

கரோனா வைரஸ் தடுப்பூசியின் தளவாடங்கள், கொள்முதல் நெறிமுறை அம்சங்கள் மற்றும் நிர்வாகத்தை பரிசீலிக்க நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

"காலிஸ்தான் கொடியை செங்கோட்டையில் ஏற்றினால் சன்மானம் வழங்கப்படும்"

டெல்லி: சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினால் சன்மானம் வழங்கப்படும் என தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் - சௌமியா சுவாமிநாதன் கருத்து

டெல்லி : கரோனா காலக்கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் பள்ளிகளைத் திறக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details