தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ETV BHARAT TAMIL

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 11 AM ETV BHARAT
TOP 10 NEWS 11 AM ETV BHARAT

By

Published : Dec 6, 2020, 11:11 AM IST

அம்பேத்கர் நினைவுநாள்: பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

‘வேளாண் சட்டம் குறித்து பிரதமருடன் பேசி முடிவெடுப்பதாக கூறிய அமைச்சர்கள்’ - விவசாயிகள் நம்பிக்கை

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

'ராஜிவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தின் புதிய வளாகத்தின் பெயர் மாற்றுவதை மறுபரிசீலனை செய்க!'

ராஜிவ்காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தின், புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுகளில் சிக்கலான நோய்களுக்கான புதிய வளாகத்திற்கு ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வால்கர் பெயரை வைப்பது குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக பணம் கடன் கொடுத்த வழக்கு: பெங்களூருவில் ஒருவர் கைது

பெங்களூரு: சட்டவிரோதமாக பணம் கடன் வழங்கிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஒருவரைக் கைதுசெய்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற்ற 22 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர்.

மும்பையில் சிலிண்டர் வெடிப்பு: 16 பேர் படுகாயம்

மும்பை: லால்பாக்கில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் இன்று (டிச. 06) காலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர் மழையால் பாதிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்தியக் குழு இன்று ஆய்வு

செங்கல்பட்டு: புயல் மற்றும் தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை!

சேலம்: மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தொடர் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 10 பேர் கைது: 52 பவுன் தங்கநகை, 21 கிலோ பட்டுநூல் பறிமுதல்!

ராமநாதபுரம்: வேலைக்குச் சென்று தனியாகச் செல்லும் பெண்களிடமும், வீடுகளிலும் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 52 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பட்டு நூல்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 23 பேர் மரணம், ஒருவர் உயிருடன் மீட்பு

சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் மூடப்பட்ட டயோஷிடோங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைட் கசிவினால், பணியில் ஈடுபட்டிருந்த 24 ஊழியர்களில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஏமனில் சிக்கித்தவித்த 14 இந்தியர்கள் இந்தியா திரும்பினர்

துபாய்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டு, 10 மாதங்களாக அவதிப்பட்டு வந்த 14 இந்திய கடற்படையினர் துபாயிலிருந்து நேற்று இந்தியா திரும்பினர்.

ABOUT THE AUTHOR

...view details