தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Tomato Price: பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை - பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி விற்பனை

சென்னை: சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

tomato
tomato

By

Published : Nov 24, 2021, 1:01 PM IST

தக்காளி வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தக்காளி விலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், இன்று (நவம்பர் 24) முதல் கூட்டுறவு சங்கம் சார்பில், பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

அங்கு ஒரு கிலோ தக்காளி 79 ரூபாய் என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் விலை அதிகரித்தபோது பண்ணைப் பசுமை கடைகளில், பொதுமக்களுக்கு 1 கிலோ, 2 கிலோ எனக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தக்காளியைப் பொறுத்தவரை வரத்து அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

பொதுமக்கள் தங்களுக்கு எத்தனை கிலோ தக்காளி தேவைப்படுகிறதோ அதனை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tomato Price: பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி - அமைச்சர் ஐ.பெரியசாமி

ABOUT THE AUTHOR

...view details