சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிறுவன் சரவணன் பிறக்கும்போதே எளிதில் வளையும், உடையும் தன்மைகொண்ட ஒருவகை மரபணு குறைபாடுள்ள எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மரபணு குறைபாடுள்ள எலும்பு இந்நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறக்கும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய எலும்பு வளையும், எளிதில் உடையக்கூடிய தன்மை இருப்பதால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் வலியுடன் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த சிரமத்தை அடைவார்கள்.
இதனிடையே, சரவணனுக்கு இந்த நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தச் சிறுவனுக்கு எலும்பை வலுவாக்க பிறந்த ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை பாமிட்ரோநோட் என்னும் மருந்து கொடுக்கப்பட்டு எலும்பு வலுவாக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வளைந்த எலும்புகளில் கம்பி பொருத்தப்பட்டு கால்கள் நேராக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை அளிக்கப்பட்ட சரவணனுடன் மருத்துவர்கள் அதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்பொழுது எந்தவிதமான துணையும் இல்லாமல் தனியாக நடக்கிறார். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறுவனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, முடநீக்கியல் துறை தலைவர் தீன்முகமது இஸ்மாயில், மருத்துவர் பசுபதி ஆகியோர் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட சரவணன்