தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் திருவள்ளூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (ஜூன் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அமைச்சரவை இன்று பதவியேற்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அமைச்சரவை பதவியேற்பு விழா எளிமையான முறையில் இன்று (ஜூன் 27) நடைபெறுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தினம்
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தினம் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சிறு, குறு, நடுத்தர தினவிழாவை முன்னிட்டு ஹெர்பல் தயாரிப்புகள் குறித்து இன்று ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல் இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே நடத்தப்படும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று (ஜூன் 27) நடக்கிறது.
ஐரோப்பிய கால்பந்து போட்டி : போர்ச்சுகல் - பெல்ஜியம் இன்று மோதல்
போர்ச்சுகல் - பெல்ஜியம் மோதல் 16ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தொடங்கியுள்ள 2ஆவது சுற்று போட்டியில் (நாக் அவுட்), போர்ச்சுகல் - பெல்ஜியம் அணிகள் ஸ்பெயினின் செவில்லி நகரில் இன்று மோதுகின்றன.