மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்ட தேர்தல்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 77 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு நேற்று முதல் தொடங்கியது.
தமிழ்நாடு வரும் பிரியங்கா காந்தி
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக தமிழ்நாடு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர நாளான நாளை (மார்ச் 28) தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம் எனக் கோயில்கள் களைகட்டும். இந்த திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்றும் நாளையும் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.