சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிப்பில், 'வடதமிழ்நாடு கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 19: தென்தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை(ஏப்ரல்.19) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 20:தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல்.20) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.