சென்னை: தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.7) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.10ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.