தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TN Weather: இரண்டு நாளைக்கு சென்னையில் ஊட்டி கிளைமேட் தான்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

By

Published : May 22, 2022, 4:43 PM IST

சென்னை: மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(மே.22), நாளையும்(மே.23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 25, 26 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:சின்கோனா (கோவை) 11 செ.மீ, சின்னக்கல்லார் (கோவை) 10செ.மீ, வால்பாறை PTO (கோவை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 8 செ.மீ, சோலையார் (கோவை) 6 செ.மீ, நடுவட்டம் (நீலகிரி) 2 செ.மீ, சேந்தமங்கலம் (நாமக்கல்), தேவாலா (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பெலாந்துறை (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கொப்பம்பட்டி (திருச்சி), கெட்டி (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), கோடநாடு (நீலகிரி) தலா 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று(மே.22) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இலட்சத்தீவு, கர்நாடகா - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை(மே.23) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: மே 22 - இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details