சென்னை: தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 4 ஆயிரம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமை பெருமளவில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 3 ஆயிரத்து 997 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 332 பேர் ஆண்கள், 664 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகியோர் ஆவார்கள்.