தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TODAY HOROSCOPE: அக்டோபர் 5ஆம் தேதி எப்படி இருக்கும்... இன்றைய ராசிபலன்... - Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 5, 2022, 6:42 AM IST

மேஷம்: உங்களுக்கு நெருக்குதல் இருப்பது சில சமயங்களில் உங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அலுவலகத்தில், சக பணியாளர்களை விட நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். எனினும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காது. எனினும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது.

ரிஷபம்: இன்று நீங்கள் உங்களது நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றிவிழாவை கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.

மிதுனம்: உங்களது நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். சிறிது பணம் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாதாரண பிரச்சனை கூட உங்கள் மனதை பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக நீங்கள் சில முடிவுகளை எடுக்கக் கூடும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, உற்சாகமாக செயல்படவும்.

கடகம்: மக்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். உங்களது வேடிக்கையான பேச்சின் காரணமாக அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். சமூகத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள். பொதுவாக இன்றைய தினம் அனைவருக்கும் சிறந்த நாளாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம், சாதக மற்றும் பாதக பலன்களை கொண்டது ஆகும். ஒருபுறம் உங்களது வர்த்தகக் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணை தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருக்கும். மற்றொருபுறம், உங்களது முயற்சிக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்திருக்கும். நண்பரின் அறிவுரையின் காரணமாக நீங்கள் இரு விஷயங்களையும் ஏற்றுக் கொள்வீர்கள்.

கன்னி: நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு உங்களால் இருக்க முடியாது. உங்களது உடல் நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.

துலாம்:இன்று உங்களுக்கு சோகமான நாளாக இருக்கும். எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, இது மன வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் நீங்கள் மன உறுதியுடன் இருப்பதற்கான முக்கிய காரணம், உங்கள் காதல் துணையின் ஆறுதலான வார்த்தைகள் ஆகும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு, உற்சாகம் அதிகம் காணப்படும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உங்கள் செயல்திறன் முழுவதையும் பயன்படுத்தி, எல்லாவிதத்திலும் வெற்றி அடைவீர்கள். பொதுவாக இன்றைய நாள், வெகுமதிகள் மற்றும் பாராட்டுக்களுடன், சிறப்பான நாளாக இருக்கும். பணியில் மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

தனுசு: இன்று உங்களுக்கு கோபம் உணர்வு அதிகம் இருக்கும். கோபம் உலகையே அழித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். இந்த கோபத்தினால் பாதிக்கப்படுவது நீங்கள் தான். அதனால் பொறுமையாக, அவசரப்படாமல் சிந்தித்து செயல்படவும். நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கவனமாக கையாளவும்.

மகரம்: நீங்கள், இன்று நியாயமான மற்றும் அநியாயமான முறையில் குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்ற தாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.

கும்பம்: எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள்.

மீனம்: 'உன் அயலானை நேசியுங்கள்' என்பதை நீங்கள் கடைபிடிப்பீர்கள். ஆன்மீக புத்தகங்களை படித்ததன் மூலம் நீங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள். ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: அக்.4 இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details