தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 962ஆக குறைவு! - பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் தகவல்

தமிழ்நாட்டில் (மார்ச் 15) இன்று புதிதாக 77 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Mar 15, 2022, 10:37 PM IST

சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 'தமிழ்நாட்டில் மேலும், புதிதாக 35 ஆயிரத்து 555 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் இதனால், புதிதாக 77 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 39 லட்சத்து 6 ஆயிரத்து 874 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், சுமார் 34 லட்சத்து 52 ஆயிரத்து 73 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

169 பேர் வீடு திரும்பினர்

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 962 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 169 பேர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13ஆயிரத்து 87 என உயர்ந்துள்ளது.

இறப்பு இல்லை

கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதித்து ஒருவர் கூட இறக்கவில்லை. சென்னையில் 28 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 10 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 8 நபர்களுக்கும் என 77 நபர்களுக்கு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று எதுவும் பாதிப்பு கண்டறியப்படாமல் உள்ளது' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் அனுபவ சான்றிதழ் பெறும் வசதி

ABOUT THE AUTHOR

...view details