சென்னை: தமிழ்நாட்டில், மேலும் 838 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 838 பேருக்கு கரோனா பாதிப்பு! - இன்றைய கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 60 ஆயிரத்து 174 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில், 838 பேருக்கு புதியதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று(ஜன.4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், ”சென்னையில் மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 241ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில், மேலும் புதிதாக 60 ஆயிரத்து 174 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 835 நபர்களுக்கும், கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம், 836 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 925 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 550 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 7,970 நபர்கள் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 985 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கைக்கு 8 லட்சத்து ஆயிரத்து 416 என அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 3 நோயாளிகளும் , அரசு மருத்துமனையில் 7 நோயாளிகளும் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12166 என அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு
வ.எண் | மாவட்டம் | பாதிப்பு |
1 | சென்னை மாவட்டம் | 2,26,456 |
2 | கோயம்புத்தூர் மாவட்டம் | 52,649 |
3 | செங்கல்பட்டு மாவட்டம் | 50,260 |
4 | திருவள்ளூர் மாவட்டம் | 42,809 |
5 | சேலம் மாவட்டம் | 31,742 |
6 | காஞ்சிபுரம் மாவட்டம் | 28,818 |
7 | கடலூர் மாவட்டம் | 24,720 |
8 | மதுரை மாவட்டம் | 20,612 |
9 | வேலூர் மாவட்டம் | 20,298 |
10 | திருவண்ணாமலை மாவட்டம் | 19,192 |
11 | தேனி மாவட்டம் | 16,933 |
12 | தஞ்சாவூர் மாவட்டம் | 17,279 |
13 | திருப்பூர் மாவட்டம் | 17,210 |
14 | விருதுநகர் மாவட்டம் | 16,399 |
15 | கன்னியாகுமரி மாவட்டம் | 16,431 |
16 | தூத்துக்குடி மாவட்டம் | 16,110 |
17 | ராணிப்பேட்டை மாவட்டம் | 15,944 |
18 | திருநெல்வேலி மாவட்டம் | 15,337 |
19 | விழுப்புரம் மாவட்டம் | 15,047 |
20 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 14,263 |
21 | ஈரோடு மாவட்டம் | 13,820 |
22 | புதுக்கோட்டை மாவட்டம் | 11,430 |
23 | கள்ளக்குறிச்சி மாவட்டம் | 10,815 |
24 | திருவாரூர் மாவட்டம் | 10,972 |
25 | நாமக்கல் மாவட்டம் | 11,272 |
26 | திண்டுக்கல் மாவட்டம் | 11,002 |
27 | தென்காசி மாவட்டம் | 8291 |
28 | நாகப்பட்டினம் மாவட்டம் | 8211 |
29 | நீலகிரி மாவட்டம் | 7993 |
30 | கிருஷ்ணகிரி மாவட்டம் | 7904 |
31 | திருப்பத்தூர் மாவட்டம் | 7478 |
32 | சிவகங்கை மாவட்டம் | 6551 |
33 | ராமநாதபுரம் மாவட்டம் | 6338 |
34 | தருமபுரி மாவட்டம் | 6451 |
35 | கரூர் மாவட்டம் | 5225 |
36 | அரியலூர் மாவட்டம் | 4637 |
37 | பெரம்பலூர் மாவட்டம் | 2257 |
38 | சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் | 930 |
39 | உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் | 1026 |
40 | ரயில் மூலம் வந்தவர்கள் | 428 |