சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 848 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 973 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 4 லட்சத்து 70 ஆயிரத்து 516 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 4 ஆயிரத்து 586 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 147 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த ஆயிரத்து 114 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 57 ஆயிரத்து 682 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என 21 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 என உயர்ந்து உள்ளது.
சென்னையில் 135 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 129 நபர்களுக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரிசோதனை செய்பவர்களில் புதிதாக வைரஸ் பற்றி கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை 0.8 என குறைந்துள்ளது. தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவும் சராசரி விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:
சென்னை மாவட்டம் - 5,54,881
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,47,011
செங்கல்பட்டு மாவட்டம் - 1,71,949
திருவள்ளூர் மாவட்டம்- 1,19,433
ஈரோடு மாவட்டம் - 1,04,441
சேலம் மாவட்டம் -1,00,013
திருப்பூர் மாவட்டம் - 95,540
திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 77,602
மதுரை மாவட்டம் - 75,237
காஞ்சிபுரம் மாவட்டம் - 75,031
தஞ்சாவூர் மாவட்டம் -75,432
கடலூர் மாவட்டம் - 64,116
கன்னியாகுமரி மாவட்டம் - 62,401
தூத்துக்குடி மாவட்டம் - 56,327
திருவண்ணாமலை மாவட்டம் - 55,003
நாமக்கல் மாவட்டம்- 52,335
வேலூர் மாவட்டம்- 49,901