இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 83 ஆயிரத்து 411 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 522 பேருக்கும், பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கும், ஆந்திராவிலிருந்து வந்த மூன்று பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த இருவருக்கும் என 5528 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 54 லட்சத்து 49 ஆயிரத்து 635 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 48 ஆயிரத்து 482 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 185 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 64 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 154ஆக அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு:
சென்னை -1,45,606
செங்கல்பட்டு -29,507
திருவள்ளூர் - 27,416
கோயம்புத்தூர் -20,839
காஞ்சிபுரம் -18,967
மதுரை -15,118
கடலூர் -15,473
விருதுநகர் -13576
தேனி -13520
சேலம் -13,590
திருவண்ணாமலை -12,442
தூத்துக்குடி -12066
வேலூர் -12234
ராணிப்பேட்டை -11783
திருநெல்வேலி -10774
கன்னியாகுமரி -10,615
விழுப்புரம் - 8990
திருச்சிராப்பள்ளி - 8540