சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆக.6) கரோனா குறித்த புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 865 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 985 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரத்து 317 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனாவால் 30 பேர் உயிரிழப்பு
இதில் 25 லட்சத்து 71 ஆயிரத்து 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938 பேர் என உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 நோயாளிகள் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,39,291
கோயம்புத்தூர் - 2,30,703
செங்கல்பட்டு - 1,62,707
திருவள்ளூர் - 1,14,009
சேலம் - 93,875
திருப்பூர் - 88,354
ஈரோடு - 94,699
மதுரை - 73,635
காஞ்சிபுரம் - 71,952
திருச்சிராப்பள்ளி - 72,862
தஞ்சாவூர் - 68,527
கன்னியாகுமரி - 60,278
கடலூர் - 60,845
தூத்துக்குடி - 55,197
திருநெல்வேலி - 48,025
திருவண்ணாமலை - 52,336
வேலூர் - 48,202