சென்னை: பொது சுகாதாரத் துறை இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலின்படி, தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 440 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 875 நபர்கள், பிற மாநிலங்களிலிருந்து வந்த 16 பேர் என மொத்தம் ஆயிரத்து 891 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனவால் 27 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 51 லட்சத்து இரண்டாயிரத்து 763 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 லட்சத்து 41 ஆயிரத்து 168 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்களில் தற்போது 26 ஆயிரத்து 158 பேர் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் இரண்டாயிரத்து 423 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 81 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 10 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 17 நோயாளிகள் என 27 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக கடலூர் மாவட்டத்தில் 3.2 விழுக்காடாகவும், மிகக் குறைந்த அளவாக மதுரை மாவட்டத்தில் 0.4 விழுக்காடாகவும் உள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,36,623
கோயம்புத்தூர் - 2,27,467
செங்கல்பட்டு - 1,60,935
திருவள்ளூர் - 1,12,760
சேலம் - 92,397
திருப்பூர் - 86,916
ஈரோடு - 92,325
மதுரை - 73,282
காஞ்சிபுரம் - 71,293
திருச்சிராப்பள்ளி - 71,749
தஞ்சாவூர் - 66,901
கன்னியாகுமரி - 59,805
கடலூர் - 59,748
தூத்துக்குடி - 54,890
திருநெல்வேலி - 47,621
திருவண்ணாமலை - 51,493
வேலூர் - 47,754