சென்னை ஐ.ஐ.டியில் தங்கி படித்து வந்த கேராளவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருமாநிலங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில்சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கிப் படித்து வரும் மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம் இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்க சுருள் வளைவு கம்பி (ஸ்பிரிங்) மற்றும் இரும்பு உருளை ஆகியவை மின்விசிறியுடன் இணைக்கப்பட்ட புதிய வகையான கருவி ஒன்று, சென்னை ஐ.ஐ.டி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மின் விசிறியில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம் மும்பையைச் சேர்ந்த ஷரத் அஸ்சானி என்பவர் தற்கொலையைத் தடுக்கும் வகையில் மின்விசிறியின் நடுவே ஸ்பிரிங் பொருத்தி, 20 கிலோ கிராம் எடையைத் தாங்கும் வகையில் உருளை வடிவிலான குழாயை கண்டுபிடித்திருந்தார். அதனைப் பெற்று சென்னை ஐ.ஐ.டி, 40 கிலோ எடையைத் தாங்கும் வகையில் மாற்றம் செய்து, அதனை பொருத்தி வருகின்றனர். இதன் மூலம் தற்கொலைகள் ஓரளவு தவிர்க்கப்படும் என ஷரத் அஸ்சானி தெரிவித்துள்ளார்.
மின் விசிறியை தவிர்த்து தற்கொலை செய்து கொள்ள எண்ணும் மாணவர்கள் வேறு சில வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். எனவே ஐ.ஐ.டியில் பயிலும் மாணவர்களின் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை, அதற்கான உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்விசிறியில் தூக்குப்போடுவதை தடுக்க ஸ்பிரிங் பொருத்தம்!