இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மோடி அரசு பொறுப்பேற்றது முதல் மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் கார்பரேட் நிறுவனங்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான சட்டம் என்ற பெயரில் மசோதாவை நிறைவேற்றி விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
விவசாய பொருட்களை நேரடியாக தனியார் வாங்குவதன் மூலம் விவசாய பொருளுக்கான கூடுதல் விலை கிடைக்காமல் போகும். நாளடைவில் தனியார் கேட்கும் பொருளை பயிர் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். தனியாருக்கு விவசாய பொருள் விற்கப்படும் போது விவசாயிகளுக்காக அரசு செய்யும் இலவச மின்சாரம், மானியம், பயீர் காப்பீட்டு தொகை என அனைத்தும் ரத்தாகும். இந்த சட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணை உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது மத்திய அரசு. இதனால் உணவுப்பொருளை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து, செயற்கை தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க செய்யலாம்.