சென்னை:தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேருந்துகளில் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்குவது தொடர்பாக நேற்று (ஜூன்20) கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில் 'இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர் தம் மனைவி, துணையாளர் ஆகியோரை இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கவேண்டும்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அனுமதி இனி வரும் காலங்களில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர் சாதனமுள்ள படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதனமில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்து ( NSS , ASS , ASL , NSL ) ஆகியவற்றில் சட்டமன்ற உறுப்பினர்களை படுக்கையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர் தம் மனைவி மற்றும் துணையாளர் ஆகியோரை இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . எனவே , அனைத்து படுக்கை வசதி கொண்ட பேருந்துகளிலும் 7UB முக்கிய பிரமுகர்களுக்கான படுக்கை வசதி ஒதுக்கீடு VIP Berth allotment வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளைமேலாளர் வழக்கு தள்ளுபடி