டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் காவல் துறையினரிடம் பிடிபடாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி காவல் துறையினர் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்! - டிஎன்பிஎஸ்சி முறைகேடு
13:10 February 06
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் தமிழ்நாட்டை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை விரிவுப்படுத்தப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி குற்றவாளிகளைத்தேடி 4 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி போலீஸ்!
இச்சூழலில், சென்னை சைதாப்பேட்டை புறநகர் 23ஆம் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை நாளை ஒரு நாள் மட்டும் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி கெளதம் உத்தரவிட்டுள்ளார்.