தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

122 துறைத் தேர்வுக்கான Answer Key வெளியீடு! - துறைத் தேர்வுக்கான Answer Key வெளியீடு

122 துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள்(Answer Key) அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

துறைத் தேர்வு
துறைத் தேர்வு

By

Published : Feb 18, 2022, 12:36 PM IST

Updated : Feb 18, 2022, 12:44 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 19/2021, நாள் 22.11.2021-இன் படி அறிவிக்கப்பட்ட 151 துறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி.01முதல் பிப்ரவரி.09வரை கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்.17 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் (18.02.2022 முதல் 24.02.2022 அன்று மாலை 5.45 மணி வரை) விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓஎன்ஜிசியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன - ஆய்வு குழு அறிக்கை

Last Updated : Feb 18, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details