சென்னை:ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான அரையாண்டு, மொழித்தேர்வு(அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு) மற்றும் நேர்காணல் தேர்வு நடக்க இருந்த தேதி மாற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்.15) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்.11 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையும், 20ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.