தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு! - டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில், ஜூன் 8ஆம் தேதி முதல் 11ஆம் வரை நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

By

Published : May 30, 2021, 7:42 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் ஜூன் 8ஆம் தேதி முதல் 11ஆம் வரை நடைபெறவிருந்த இரண்டாம் நிலை போக்குவரத்து வாகன ஆய்வாளர், மற்றும் சார் நிலைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகள், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

இதற்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதோபோல மே 29ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். அத்துடன் ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவிருந்த துறைத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத் தேதி ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இத்தேர்வானது ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். மேலும், ஏற்கனவே நடந்து முடிந்த 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 7ஆம் வெளியிடப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வாணை நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது- இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details