தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி- தமிழ் வழி பயின்றோர் சான்றிதழ் பதிவேற்ற உத்தரவு

குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதியவர்களில் தமிழ் வழி கல்வி பயின்றோர் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டுள்ளது.

TNPSC for relief on quota for Tamil medium students
TNPSC for relief on quota for Tamil medium students

By

Published : Jul 31, 2021, 5:01 PM IST

சென்னை: அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்க ஏதுவாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் விவரங்களை அளிக்க டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் வழி பயின்றோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் திட்டம் ஏற்கனவே அமலில் இருந்துவருகிறது. இந்த நிலையில் தேர்வாளர்களின் விவரங்களை அளிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி குரூப் 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் தாங்கள் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்வழி படித்த சான்று மற்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு தமிழ் வழியில் பயின்ற சான்றை சம்பந்தப்பட்ட இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதனை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

மேலும் தமிழ் வழி பயின்றோர் எனக் கூறிவிட்டு தேர்வு எழுதியிருந்தவர்களும் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம். அவ்வாறு தமிழ்வழி சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் முன்னுரிமை அளிக்கப்படாது. மேலும், அவர்கள் அரசு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கோர முடியாது.

இதையும் படிங்க : குரூப்-1 தேர்வில் தவறாக இடம்பெற்ற 6 கேள்விகள்

ABOUT THE AUTHOR

...view details