இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கால்நடை மருத்துவத் துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன. அதன்படி சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 மையங்களில் பிப்ரவரி 23 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கால்நடை மருத்துவர் எழுத்துத் தேர்வு - சென்னையில் மட்டுமே தேர்வு மையம் - கால்நடை மருத்துவர்
சென்னை: குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக கால்நடைத் துறை மருத்துவர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வினை சென்னையில் மட்டுமே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
exam
தற்போது இந்த எழுத்துத் தேர்வினை, சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்விற்கு சென்னை நீங்கலாக இதர தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு இதுகுறித்து குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!