Temple Advisory Committee: சென்னை:"அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகள் வழங்குவதற்கும் மாநில அளவிலான ஓர் உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை தலைவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல் சார்ந்த இந்து சமய அறநிலையத்துறை செயலரும், ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 பேர் அலுவல் சாரா உறுப்பினர்கள்