சென்னை தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 230/33 கேவி துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணியை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் 2 ஆண்டுகள் பராமரிப்பதற்கு கட்டணமாக 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு புதிதாக 230/110 கேவி துணை மின் நிலையம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தலைமைப் பொறியாளர் (இயக்கம்) சென்னை மேற்கு கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு செப். 21ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்படும் 230/33 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு 91 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த துணை மின் நிலையங்கள் குத்தகை அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, விதிகளின்படி பராமரிக்கப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லாமல் பராமரிக்க நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விதிகளின்படியே டெண்டர்கள் விட வேண்டும் என அதில் கூறியிருந்தார்.