தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்வாரியப் பணிகள்: விண்ணப்பிக்க கால அவகாசம்!

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

recruitment
recruitment

By

Published : Mar 9, 2020, 1:49 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு, கணினி அடிப்படையிலான ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் நலன் கருதி தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து, கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாததால் பொதுமக்களுக்கு மின்சார சேவை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து, மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்கள் 1300, உதவி பொறியாளர் பணியிடங்கள் 650, இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 500, கேங்மேன் பணியிடங்கள் 5000 என காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கடினமான வேலைகளில் திறமையை காட்டுங்கள்' - டிஐஜி பவானீஸ்வரி

ABOUT THE AUTHOR

...view details