தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மின்சார வாரிய கேங்மேன் பணிக்கான தேர்வு தேதி தள்ளிவைப்பு! - tneb hangman exam
சென்னை: கனமழைக் காரணமாக மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கான தேர்வு தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மேற்படி உள்ள நிகழ்வுகள் செங்கல்பட்டு, சென்னை வடக்கு, சென்னை மத்தியம், சென்னை தெற்கு 1, சென்னை தெற்கு 2, சென்னை மேற்கு, காஞ்சிபுரம், மதுரை, மதுரை மாநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, ராமநாதபுரம், கடலூர், நாகப்பட்டினம், உடுமலைப்பேட்டை, கரூர், நாமக்கல், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. .
ஆனால், தற்போது பெய்துவரும் கனமழையினால், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.