தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் மின்சாரவாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்! - மின்சாரவாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சென்னை: மின்சார வாரியத்தில், தனியார்மயம் புகுத்தப்படுவதை கண்டித்து பல்வேறு மாவட்ட மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

tneb-employees-protest
tneb-employees-protest

By

Published : Nov 4, 2020, 4:26 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டாத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று(நவ.04) அனைத்து மாவட்ட மின்வாரிய ஊழியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனடிப்படையில், கோயம்புத்தூர் பவர்ஹவுஸ் பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து நாமக்கல் மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன்பும், பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோட்டில் அமைந்துள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சேலம் உடையாப்பட்டி மின்சார வாரியம் முன்பும், பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் முன்பும், வேலூர் காட்பாடியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details