தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. மின்சார வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கும் பணியை தொடங்கி உள்ளது. இதனால் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.
மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்? - TNEB employees strive news in Tamil
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் செயலை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் இன்று (டிச. 18) அறிவிப்பு வெளியிடுகின்றன.
தமிழ்நாடு மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதால், அதனை கண்டித்து ஏற்கனவே தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து நேற்று (டிச. 17) ஆலோசனை நடத்தி உள்ளனர். மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிகாரபூர்வமாக இன்று (டிச. 18) மாலையில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க...சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!