தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணி நிரந்திரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் சென்னையில் பெரும் போராட்டம் - தமிழ்நாடு மின் ஊழியர்கள் போரட்டம்

பேரிடர் காலத்தில் பெருமை சேர்த்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என கோரிக்கையில் மின் ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம்

By

Published : Mar 17, 2022, 9:17 AM IST

சென்னை: தானே, வர்தா, ஒக்கி, கஜா, சென்னை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அனல், புனல் காற்றாலை மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களின் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவகம் முன்பு நடைபெற்றது.

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ஒப்பந்தப்படி ரூ. 380 வழங்க வேண்டும் மற்றும் திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் பத்தாண்டுக்குமேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், மின்தொடரமைப்பு கழகம், பொது கட்டுமான வட்டம் மற்றும் எரிவாயு சுழலி பகுதிகளில் வேலைசெய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க:போக்குவரத்துத்துறையில் தொடரும் ரெய்டு - ரூ.1.79 ரொக்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details