கரோனா வைரஸ் கிருமிகள் பரவுவதைத் தடுக்க மின் நுகர்வோர் முடிந்த வரையில் ஆன்லைன் ( www.tangedco.in) மூலமாகவோ அல்லது மின்சார வாரிய செயலி மூலமாகவோ பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்தும் மையங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்படும். பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் தங்களின் குறைகளை தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உதவிப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களின் எண்களை இணையத்தின் மூலம் அறிந்து தெரிவிக்கும்படி கூறப்பட்டது.
கரோனா வைரஸ் - ஆன்லைனில் கட்டணம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தல்! - கரோனா வைரஸ்
சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து மின் வாரியப் பணம் செலுத்தும் இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் கை கழுவுவதைப் பற்றியும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு: மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி நடவடிக்கை