இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பொறியியல் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று (அக். 08) தொடங்கியுள்ளது. மாணவர்கள் பொது தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. அக். 08ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் கட்டணங்களைச் செலுத்தலாம். அக். 12ஆம், 13ஆம் தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைப் பதிவுசெய்யலாம். அதில் மாணவர்கள் எத்தனை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
அக். 14ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை மாணவர்களுக்கு வெளியிடப்படும். மாணவர்கள் அக். 14ஆம் மற்றும் 15 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டின் அடிப்படையில் விரும்பிய கல்லூரியை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். மாணவர்கள் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு கிடைத்திருந்தால் அதனை உறுதி செய்யலாம்.
ஒரு வேளை மாணவர்கள் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்காவிட்டால் அடுத்தச் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் அல்லது மாணவர்கள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியை விட மேலே விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்தால் அதனை அளிக்குமாறும் கோரிக்கை வைக்கலாம்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் ஆனால் மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்வது கட்டாயமாகும். மாணவர்கள் விரும்பிய கல்லூரியை அவர்கள் ஏற்கும்விதமாக இறுதி செய்து (Confirm Option) தேர்வு செய்தால் மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரி கிடைக்கும்.
அதன் பின்னரே மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்து கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் இந்தாண்டு 52 மாவட்டங்களில் செயல்பட்டுவருகிறது. அங்கு கரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிஇ, பிடெக் தரவரிசை பட்டியல் செப்.28 ஆம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கேபி அன்பழகன் தகவல்!