தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2021, 2:05 PM IST

ETV Bharat / city

அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை

அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக வந்த புகாரின் மீது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று (ஜூன் 9) விசாரணை மேற்கொள்கிறது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
அடையாறு கேந்திர வித்யாலயா பள்ளி பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: கே.கே. நகர் பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் அச்சுறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள எட்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் அச்சுறுத்தல் அளித்ததாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

அந்தப் புகார்கள் மீது ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமா புதிய புகார்கள்?

சென்னை அடையாறில் உள்ள சிஎல்ஆர்ஐ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி, ஆசிரியர் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் அளித்ததாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்குப் புகார் அனுப்பியிருந்தார்.

அதன் அடிப்படையில், சிஎல்ஆர்ஐ கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் ஆகியோர் பள்ளியின் முதல்வர், குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

இந்த விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜுன் 11ல் காங்கிரஸ் நாடுதழுவிய போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details