தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர் பட்டியல் திருத்தம் நவம்பர் முதல் தொடக்கம் - TN voter list correction

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதிமுதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் நடைபெறுகிறது. மேலும் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்பு நாளாக கணக்கிட்டு சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

By

Published : Aug 6, 2021, 2:09 PM IST

நவம்பர் 1 முதல் 30ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர் நீக்கத்துக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது டிசம்பர் 20ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்க 25 வயது உள்பட்டவர்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம். மேலும் www.nsvp.in என்ற இணையதளம் வாயிலாகவும், மொபைல் ஆப் வழியாகவும் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், வெளிநாட்டில் வசிப்போர் தேர்தல் அலுவலரிடம் பாஸ்போர்ட் காண்பித்து விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உயிருக்குப் போராடும் குழந்தை - முதலமைச்சரின் உதவியை நாடும் பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details