சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கோணிப்பையில் சடலமாக அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆவடி சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளியின் மனைவியும் கைது! - pocso
திருவள்ளூர்: ஆவடி அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவியையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது உறவினரும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான மீனாட்சிசுந்தரம்(60) என்பவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கின் அதிரடி திருப்பமாக சிறுமியை கொலை செய்துவிட்டு அதனை மறைப்பதற்கு முயற்சித்த மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியதாக அவரின் மனைவி ராஜம்மாளயும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இருவரும் ‘போக்ஸோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.