தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜூன் 3, மோடி அரசுக்கு கடைசி நாள்: இந்திய கம்யூ., முத்தரசன் - muththarasan

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை மோடியை போல் ஒரு மோசமான பிரதமரை நாடு சந்தித்தது இல்லை என்று தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

By

Published : Mar 29, 2019, 9:43 AM IST

அம்பத்தூரில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுகவேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிலிருந்து சில துளிகள்:

  • தமிழ்நாட்டின் உரிமை நீட், காவிரி போன்ற அத்தியாவசிய தேவைகள் பறிபோனது.
  • வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொல்லி ஏமாற்றினார் மோடி.
  • நாடு இதுவரை கண்டிராத சர்வதிகார, மதவாதகுணங்கொண்ட பிரதமர் மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
  • நாட்டில் ஒரு அரசியல் கட்சியை பணத்திற்காக விலைபேசி விற்கப்பட்ட கட்சி பாமக மட்டுமாகதான் இருக்கமுடியும்.
  • அதிமுக கூட்டணி கொள்கையில்லாத துரோகக் கூட்டணி.
  • 18 தொகுதிகளில் திமுகவெற்றி பெற்றால் தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும்.
  • ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் வரை மோடியின் அரசு இருக்கும். மோடி அரசுக்கு அதுவே கடைசி நாள்.

ABOUT THE AUTHOR

...view details