தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பி.இ, பி.டெக் படிப்பில் சேர இணையதள முகவரி வெளியீடு! - ஆன்லைன் விண்ணப்பம்

சென்னை: 2019 ஆம் ஆண்டு பொறியியல் முதலாமாண்டு, பி.டெக் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணைய முகவரி மற்றும் அதன் விபரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

TN technical directorate

By

Published : Apr 24, 2019, 4:23 PM IST

இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில்,

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019, முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லுாரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2019-20-ம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் முலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி https://www.tneaonline.in, http://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தின் முலம் மே 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அதன் விபரங்களும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் விண்ணப்பத்தின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய இணையதளம் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைன் முலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை என்ற பெயருக்கு வரைவோலையாக (டிடி) எடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் அளிக்கலாம்.

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை ஆகியவைகளை இணையதளம் முலம் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் ஆகிய விபரங்களை தங்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.

விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் மட்டுமே நடைபெறும். அதேபோன்று சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 044-22351014,044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details