தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு' - MA SUBRAMANIAN

நீட் தேர்விற்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் வேண்டாம், MA SUBRAMANIAN, மா சுப்பிரமணியம்
நீட் வேண்டாம்

By

Published : Jul 12, 2021, 8:36 PM IST

Updated : Jul 12, 2021, 9:28 PM IST

சென்னை:தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதிதாகப் பதவியேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், வரும் வியாழக்கிழமை (ஜூலை 15) நேரம் கிடைத்துள்ளதால் டெல்லி செல்ல உள்ளேன்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசி ஒதுக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

உறுதியான நிலைப்பாடு

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு, இருப்பினும் மாணவர்களுக்கு நீட் தேர்வால் சிறிதளவேனும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நீட் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன.

நீட் - பெரிய சட்டப் போராட்டம்

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியின்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் உயர்கல்வி தொடர்வதற்காக கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை தவிர்ப்பதற்காக திமுக அரசு குழு அமைத்து நுழைவுத் தேர்வு வராமல் தடுத்தது.

அதேபோல் தற்பொழுதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை (ஜூலை 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது பெரிய சட்டப்போராட்டம் என்பதினால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எந்த தவறும் இல்லை.

சைதையில் கால்பந்து மைதானம்

சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா கடந்த காலங்களில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டது. தற்பொழுது அதை விரிவாக்கம் செய்து கால்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவான பூங்காவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Last Updated : Jul 12, 2021, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details