சென்னை:அரசு பள்ளிகளின் தரம் மேம்பட “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற புதிய திட்டத்தை பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பல்லேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ‘தமிழ்நாடு முதலமைச்சரின் fellowship’என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ‘தமிழ்நாடு fellowship கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் , நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் தமிழ்நாடு கல்வி பொலோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.