தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்- மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை! - ஆலோசனை
08:49 July 27
தமிழ்நாட்டில் மாவட்ட பிரிப்பால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக அமைச்சர் கே.என். நேரு வரும் டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தூத்துக்குடியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று மாலை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.