சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மக்கள் அதிமுக பக்கம்தான் - ஒ.பன்னீர்செல்வம் - Admk won in Nanguneri
சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் அதிமுக பக்கம்தான் உள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
அப்போது பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மாபெரும் வெற்றியை தொகுதி மக்கள் அதிமுகவிற்கு அளித்துள்ளனர். இதனால் அந்தத் தொகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக உழைத்த அதிமுக பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றியின் முலம் மக்கள் அதிமுக பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலிலும் அடுத்த பொதுத் தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும் என்பதும் மக்கள் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது என தெரிவித்தார்