தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ்? - TN

சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரிபாதி ஐபிஎஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிஜிபி

By

Published : Jun 27, 2019, 5:15 PM IST

தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக (டிஜிபி) பதவி வகித்து வரும் டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த தமிழ்நாடு சட்டம் இழுங்கு இயக்குனரை (டிஜிபி) தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, தமிழ்நாடு சட்டம் இழுங்கு இயக்குனர் பதவிக்கு தகுதிவுடையவர்களின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதில், திரிப்பாதி, ஜாபர் சேட்,லட்சுமி பிரசாத் ஆகிய 3 பேரின் பெயர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பியது.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரிப்பாதி ஐபிஎஸ் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசாவில் பிறந்த திரிபாதி இந்திய காவல்துறை உயர் அதிகாரிகளில் சர்வதேச அளவிலான இரண்டு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். முக்கியமாக 2001 அக்டோபர் 31ஆம் தேதி டொரொண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108ஆவது ஆண்டு சர்வதேச முதன்மை காவலர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில், சர்வதேச சமூக காவல் விருதும், 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஸ்காட்லாண்டில் காமன் வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவு சார்பில் நிர்வாகத்திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது. காமன் வெல்த் நாடுகளில் இந்த விருதைப் பெற்ற முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இந்திய அரசாங்கம் "Friendly Neighbourhood Cops" என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பியது.

மேலும், சிறந்த சேவைக்கான காவலர் விருது இவருக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details