நாமக்கல், கரூர், சென்னை உள்ளிட்ட 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாணவர்களிடம் ரூ.180 கோடி வரை பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்த அலுவலர்கள் மீதமுள்ள ரூ.150 கோடி குறித்த விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த 180 கோடியில், ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து மேலும் ரூ.150 கோடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வருமானவரித் துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அதில் குறிப்பாக நீட் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது.
நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் உள்ள தொழில், கட்டுமானம், கல்வி நிலையங்கள் அதன் உரிமையாளர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.