தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2021, 8:16 PM IST

Updated : Jul 2, 2021, 10:44 PM IST

ETV Bharat / city

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

20:14 July 02

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்தாண்டு(2020) மார்ச் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகளை நடப்பாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் ஜூன் 29 ஆம் தேதி அறிவித்தது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவுடையும் நிலையில், கரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்தபோதிலும், நோய்த்தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி,

* மாநிலங்களுக்கிடையே தனியார், அரசு போக்குவரத்து

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

* திரையங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்

* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

* பொதுபோக்கு விளையாட்டு, கலாசார நிகழ்வுகள்

* பள்ளிகள், கல்லூரிகள்

* உயிரியல் பூங்காக்கள் ஆகியவை ஜூலை 12 காலை 6 மணி வரை செயல்பட தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

* நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே

அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட  அனுமதிக்கப்படும்.

மேலும் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.

* அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனை கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம்

ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்களில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவிகித  வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.

* கேளிக்கை விடுதிகளில் ( Clubs ) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

* தங்கும் விடுதிகள் ; உறைவிடங்கள் ( Holets and lodges ), விருந்தினர் இல்லங்கள் ( Guest Houses )  செயல்பட அனுமதிக்கப்படும் அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் ( dormitory ) 50 % வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 %  வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்கள் ( Shopping Complex, Malls ) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 % இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.  

* வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

பொது

* அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் .  

* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் ( hand sanitizer with dispenser ) கட்டாயமாக வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு 5 பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு , கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது

* கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

Last Updated : Jul 2, 2021, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details