தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற முழு வாக்கு நிலவரம்?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எவ்வளவு இடங்களை ஆளும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றுள்ளன என்பதையும், பிற கட்சிகளின் வாக்கு நிலவரத்தையும் இத்தொகுப்பில் காணலாம்.

By

Published : Oct 14, 2021, 11:46 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை திமுகவே கைப்பற்றி உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வசமாக்கியுள்ளன. மீதமுள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

திமுக கிளீன் ஸ்வீப்

ஒன்பது மாவட்டங்களின் 140 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 138 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அமமுக நான்கு இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

மாவட்ட ஒன்றிய ஊராட்சி உறுப்பினர் (விழுக்காடு வாரியாக)

மொத்தம் உள்ள 74 ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. செங்கல்பட்டு தவிர்த்து பிற எட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (விழுக்காடு வாரியாக)

பிற கட்சிகளின் நிலவரம்

ஆயிரத்து 381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளன. அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட ஒன்றிய வார்டுகள் மட்டுமே கிடைத்தன.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக 78 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது.

அதிமுக மிகவும் பின்தங்கி வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் வாக்கு வங்கியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இந்தப் படை ஒன்றே வெல்லும் படை' என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்ட உ.பி.க்களே!

ABOUT THE AUTHOR

...view details