தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலை - தமிழ்நாட்டில் இன்றைய வானிலை

அடுத்து மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN likely to experience dry weather for next three days
TN likely to experience dry weather for next three days

By

Published : Feb 7, 2022, 4:19 PM IST

சென்னை:இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்து மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப் 10ஆம் தேதி, தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப் 11ஆம் தேதியில் வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உள் மாவட்டங்களில் லேசான மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details