இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இலங்கையை எச்சரித்த தமிழ்நாடு உளவுத்துறை - இலங்கை
சென்னை: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக முன்கூட்டியே தமிழ்நாடு உளவுத்துறை அந்நாட்டை எச்சரித்தது தற்போது தெரியவந்துள்ளது.
tn ib
குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கையை இந்திய உளவுத்துறை எச்சரித்தும் அதனை இலங்கை அதிகாரிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதாக பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக கடந்த 20ஆம் தேதியே தமிழ்நாட்டு உளவுத்துறை இலங்கை தூதரகத்திற்கு எச்சரிக்கையை அனுப்பியது என தகவல் வெளியாகியுள்ளது.